Local

கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் தோன்றலாம் WHO எச்சரிக்கை!

எதிர்காலத்தில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் வெளிப்படலாம் என்பதை உயிரியல் ரீதியான நிலைப்பாடுகள் உறுதி செய்கின்றன என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

எனவே, மற்றொரு தொற்றுநோய்க்கு தயாராகும் வகையில் தற்போதைய தொற்றிலிருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினார்.

ஜி20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் நேற்று பேசும்போதே உலக சுகாதார அமைப்பு தலைவா் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச அளவில் தொற்று நோய் நெருக்கடிகளை சிறப்பாகக் கண்டறிந்து கையாளக்கூடிய வகையில் வலுவான, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் போதிய நிதி ஆதாரத்தைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு தேவை.

இது தொற்றுநோய்களுக்கு எதிரான விரைவான எதிர் நடவடிக்கைகளையும் சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான ஒருவழிமுறை எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading