Gossip

கணவனின் ஆசையை சமாளிக்க ஆபாச பொம்மையை அன்பளிப்பு செய்த மனைவி!

இங்கிலாந்தில் கணவனின் பாலியல் ஆசையை சமாளிக்க மனைவி செய்த வித்தியாசமான செயல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுவாக தம்பதியினர் இடையே ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக பாலியல் உறவில் ஏற்படும் மனக்கசப்பு உள்ளது. இது சில நேரங்களில் விவாகரத்து வரைக்கும் சென்று விடுகிறது.

இது ஆண், பெண் இருவருக்குமிடையேயான பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் பல நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் இங்கிலாந்தில் கணவனின் பாலியல் ஆசையை சமாளிக்க மனைவி செய்த வித்தியாசமான செயலை செய்துள்ளார்.

இங்கிலாந்தின் வார்விக்‌ஷையரைச் சேர்ந்த பெண்ணான சார் கிரேவும், அவரது கால்லும் மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்து வருகின்றனர்.

இதில் கால்லுமிற்கு பாலியர் உறவில் அதிக அளவில் ஆர்வம் இருந்துள்ளது.  சில நேரங்களில் சார் கிரே பாலியல் உறவில் ஆர்வம் காட்டாததால் தம்பதியினர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் கால்லின் பாலியல் ஆசையை தீர்க்க அவர் புது ஐடியா ஒன்றை செயல்படுத்தினார்.

அதன்படி தன்னைப் போன்ற தோற்றமுடைய ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கி தனது கணவனுக்கு சார் கிரே பரிசளித்தார்.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சமாகும்.

இதற்கு டீ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாங்கள் இருவரும் அந்த பொம்மையுடன் வாழ விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டீயும் டிவி பார்க்கும்போது அல்லது லாங் டிரைவ் செல்லும் போது இவர்களுடன் அழைத்து செல்லப்படுகிறது.

அந்த பொம்மை எங்கள் உறவை வலுப்படுத்த உதவுவதாகவும், தாம்பத்திய வாழ்வை மேம்படுத்துவதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டீக்கு முன்னால் இவர்கள் இதேபோன்று ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அது எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading