Cinema

கணவன் அடித்ததில் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி கணவன் கைது!

பிரபல மாடலும், கவர்ச்சி நடிகையுமான பூனம் பாண்டே அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவரது கணவர்சாம் பாம்பேவை  பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார்.

 இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக  பொலிசார் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாகி இணைந்தனர். 

இந்தநிலையில் இருவருக்கும் மீண்டும் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பூனம் பாண்டேவை சாம் பாம்பே சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் தலை, முகம் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மும்பை பொலிசார் சாம் பாம்பே-வை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading