Cinema

கணவர் கர்ப்பம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தீஸ் தேஷ்முக்கும் இணைந்து நடித்து வரும் படம் மிஸ்டர் மம்மி. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம்ஸ் மற்றும் ஹெக்டிக் சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது.

இந்தப் படம் ஒரு ஆண் கருவுற்றால் என்னவாகும் என்பதே படத்தின் கதை. இந்தப படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஷாத் அலி இயக்கியுள்ளார்.

துஜே மேரி கசம் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜெனிலியாவும் ரித்தீஸும் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெனிலியா பாய்ஸ், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading