World

‘கணவர் விற்பனைக்கு’ இணையத்தில் ஏலம் விட்ட மனைவி!

அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தன் கணவர் ஜான் மலிஸ்டர் ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். 

அந்த விளம்பரத்தில், ‘ஜானுக்கு 37வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன் இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணீர் காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்.

ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது’ என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. 

ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர். 5,000 ரூபாய் வரை விலை கேட்கப்பட்டது. இதற்கிடையே  வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading