Local

கத்தாரிலிருந்து இலங்கை வரவிருந்த விமானம் மறு அறிவித்தல் வரை இரத்து


கத்தாரிலிருந்து இன்று (மே-25) இலங்கை பறக்கவிருந்ந சிறப்பு விமானம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கி தாயகம் செல்ல முடியாமல் இருந்த இலங்கையர்களை விசேட விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரச தீர்மானித்தமையின் அடிப்படையில் அண்மையில் உலகின் பல நாடுகளிலிருந்து இலங்கையர்கள் கட்டம் கட்டமாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கத்தாரிலுள்ள இலங்கையர்களில் ஒரு தொகையினர் இன்று (25.05.2020) தாயகம் அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தனர். 
என்றாலும் என்றாலும் குவைத்திலிருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களிலிருந்து நேற்று (24.05.2020) வரை 56 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கத்தாரிலிருந்து இலங்கைக்கு இன்று இரவு பயணிக்க ஏற்பாடு செய்யபட்டிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் விசேட மெயில் மூலம் அனுப்ப வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading