Local

கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையர் போட்டி!

புலம்பெயர்ந்த இலங்கையர் ஒருவர் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Dharmasena Yakandawela, NDP கட்சியின் சார்பில், Abbotsford ridingஇன் பிரதிநிதியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.  

குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள் மற்றும் புதிதாக புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டங்களை தான் நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள Yakandawela, ஒரு முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர் ஆவார். அவர் ஒரு புலம்பெயர்தல் சட்டத்தரணியாக உள்ளார்.

முன்பு இலங்கையில் நீதிபதியாக பணியாற்றிய Yakandawela, 2006ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இன்றுவரை லிபரல் அரசால் சரியாக கவனிக்கப்படாத விடயங்களான விலைவாசி, குடியிருப்பு வசதி முதலான விடயங்கள் மீது கவனம் செலுத்த இருப்பதாக Yakandawela தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading