Cinema

கமல்,சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அடுத்து தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த ‘ஜதிரத்னலு’ பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்குப் பிறகு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். நாயகியாகச் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாய் பல்லவியின் 30வது பிறந்த நாளான மே 9 ஆம் தேதியன்று கமல்ஹாசனுடன் அவர் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுப் பிறந்த நாள் வாழ்த்துகளோடு அறிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு கவனம் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading