Local

கரும்புகை வௌியிடும் வாகனங்கள் தொடர்பில் முறையிடலாம்!

 

அதிக அளவில் கரும்புகையை வௌியிடும் வாகனங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரீட்சித்தல் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

070 3500 525 எனும் WhatsApp இலக்கத்தின் ஊடாக குறித்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளை மக்கள் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் கரும்புகையை வௌியிடும் வாகனங்களையும் அவை பயணிக்கும் இடத்தயைும் தௌிவாக அறியக்கூடிய வகையிலான படத்தை குறித்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், நிதியத்தின் கண்காணிப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்பதுடன், குறித்த வாகனத்தை அடையாளம் கண்டு, குறைபாட்டை சீர்செய்வதற்கு ஒரு மாத அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அந்த குறைபாடு சீர்செய்யப்படாத பட்சத்தில், வாகனத்தின் வருமான வரி அனுமதிப்பத்திரம் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading