Local

கர்ப்பமான கணவன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மொடல் அழகி!

கொலம்பியாவை சேர்ந்த மொடல் டன்னா சுல்தானா- எஸ்டீபன் லேண்ட்ராவ் ஜோடி விரைவில் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். குழந்தை வயிற்றில் வளரும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
தம்பதிகள் குழந்தையை எதிர்பார்ப்பது சாதாரண விசயம், இது எல்லாம் செய்தியா என யாரும் நினைக்கக்கூடும்.
ஆனால், இது ஒரு செய்திதான். ஏனெனில், குழந்தையை பெற்றெடுக்கப் போவது டன்னா சுல்தானா அல்ல. அவரது கணவன் எஸ்டீபன் லேண்ட்ராவ்தான் குழந்தையை பிரசவிக்கப் போகிறார். அவரது வயிற்றில் இப்பொழுது 9 மாத குழந்தை வளர்ந்துள்ளது!

இது எப்படி சாத்தியம்?

இந்த ஜோடி மாற்றுப் பாலினத்தவர்கள். டன்னா சுல்தானா, கொலம்பியாவில் நன்கு அறியப்பட்ட மொடல். ஆனால் அவர் பிறப்பில் பெண்ணல்ல. ஆணாக பிறந்து, பின்னர் தன்னை பெண்ணாக உணர்ந்தவர்.
எஸ்டீபன் லேண்ட்ராவ் பெண்ணாக பிறந்து, பின்னர் தன்னை ஆணாக உணர்ந்தவர். இருவரும் சில வருடங்களாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் உருவ மாற்றத்திற்கான ஹோர்மோன் சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும், பாலியல் உறுப்புக்களில் மாற்றம் செய்யாமல், கணவன் மனைவியாவும், மனைவி கணவனாகவும் செயற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading