Local

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனாவால் காசல் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது

பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கோரோனா இருப்பது உறுதியானதை அடுத்து காசல் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் காசல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக கர்ப்பிணிப் பெண் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டார்.

எனினும் காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading