Entertainment

கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம் பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகையான தபு, தமிழில் ‘காதல் தேசம்’, ‘இருவர்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘சினேகிதியே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆகலாம். வாடகைத் தாய் (சரோகசி) மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது.

எனக்கு தாயாக வேண்டும் எனத் தோன்றினால் அந்த முறையை நான் கடைப்பிடிப்பேன். என்னை யாராலும் தடுக்கமுடியாது. திருமணம் ஆகாவிட்டால் செத்துப்போகமாட்டோம். திருமணம் அவசியம் இல்லை.இப்போது எனது நடிப்புத் தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும் திருமணத்துக்கும் வயது சம்பந்தம் இல்லை. திருமணத்திற்கும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்கூட வயது சம்பந்தமில்லை. ஆமாம். இந்தக் காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல…’’ என அசால்ட்டாக குண்டை வீசியுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading