Local

கள்ளன் பொலிஸ் விளையாட்டின் விளைவாக சரிவை நோக்கி நகரும் இலங்கை

மிகவும் பலமான பொருளாதார கொள்கை திட்டமிடலுடன் ஆரம்பமான இன்றைய அரசாங்கமானது இன்று அதே அரசியலுக்காக கள்ளன் பொலிஸ் விளையாட்டின் விளைவாக பாரிய சரிவை நோக்கி நகர்கின்றது

இலங்கையின் இன்றைய சூழ்நிலைகள் அதனோடு தற்கால அரசியல் ஆதயம் தேடும் ஒரு நகர்வானது நிச்சயமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மிகவும் பாரிய வீழ்ச்சிக்கு கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை

பொருளாதார கட்டமைப்பின் ஸ்த்திர தன்மை என்ற பதம் திட்டமிடல் அதோடு அதனை செயற்படுத்தும் நிருவாக துறையிலே தங்கியுள்ளது

இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதில் அதோடு அதன் எதிர்கால வர்த்தக சேவைகளின் தாக்கம் இலங்கையை வறுமை இலக்கை நோக்கி நகரும் என்பதில் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் நிகழ்கின்றது

ஒரு நாட்டின் வறுமைக்கான காரணங்கள் பல விடயங்களை ஊடுருவி செல்வதற்கான பல விடயங்கள் காணப்படுகின்றது அதில் காணப்படும் முதல் சில காரணங்கள் இலங்கையின் வருமானங்களை எது அதிகமாக ஈட்டித்தருகின்றது அதே நேரம் எதில் ஒரு நாடு அதிகம் செலவழிக்கின்றது என்ற கோட்பாட்டிலே தங்கியுள்ளது

இன்றைய உலக அசைவுகளின்படி உலகில் எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது என்பது சாதாரணமான விடயமே

இலங்கையும் அதற்கு விதிவிலக்கள்ள ஆனால் ஏற்பட்டிருக்கும் இந்த மந்தமான பொருளாதார கட்டமைப்பை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதிலே அதன் வெற்றி தங்கியுள்ளது அப்படி அதனை முன்னெடுத்து செல்லும் வழிவகைகளை இலங்கையின் திட்டமிடலுக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பாரிய நிருவாக இடைவெளி இருக்கின்றது என்பதுதான் யதார்த்த பூர்வமான உண்மையாகும்

அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் சில அரசியல் நகர்வுகளின் மறைமுக தன்மையே இன்று இலங்கை உலக வர்த்தக மையத்திலிருந்து இடைவெளி ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது

எனவே எமது இலங்கையின் எதிர்கால நகர்வினை நாம் மிகவும் அவதானமாக உற்று நோக்கி நமது தேடல்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

எப்போதும் நமது பிரதேசம் தேசியமட்டத்தின் தாக்கத்துக்குள் எமது வருமானங்களை அமைத்துக்கொள்ளாமல் அது தவிர்ந்த அன்றாட தேவையை பூர்த்தி செய்யக்கூடிய உணவு உற்பத்தியில் நாம் எமது தேடல்களை திசை திருப்பிவிடுவோம் அதன் Demand எப்போதும் எந்த காலகட்டத்திலும் தேவை ஒன்றாகவே காணப்படும்

Dubai போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது பாலைவன நிலத்தினை பச்சை பொருளாதாரத்தை நோக்கி திசை திருப்பி இருக்கின்றது என்றால் நமது நிலங்களை நாம் இன்னும் முழுமையாக பாவிக்காமலே இருக்கின்றோம்

சுகாதார மற்றும் கடல் விவசாய உணவு உற்பத்தியில் நவீன தொழில் நுற்பங்களை உள்வாங்குவதன் மூலம் நாம் எமது பிரதேசத்தை ஒரு தனி அடையாளமாக செயற்படுத்துவதற்கு ஒவ்வொரு இன்றைய இளைஞர்களும் முன் வரவேண்டும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading