World

காகங்களுக்கு ஊதியம் வழங்கும் நாடு!

சுவீடனில் அண்மைக்காலமாக வீதிகளில் அதிகளவான   சிகரெட் கழிவுகள் வீசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைந்த செலவில்  தெருக்களைத் தூய்மைப்படுத்தும் வகையில்  கார்விட் க்ளீனிங் என்ற நிறுவனமொன்று ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்தவகையில்  காகங்களுக்கு, வீதிகளில் காணப்படும் சிகரெட் துண்டுகளை எடுத்துச் சென்று உரிய தொட்டியில் போடுவதற்கு  அந் நிறுவனமானது பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகெரெட் துண்டுகளை குப்பைத் தொட்டியில் முறையாகப் போடும் காகங்களுக்கு ஊதியமாக நிலக்கடலைகளையும்  அந்நிறுவனம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading