World

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

காசாவின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

காசாமீது முழு அளவிலான போரை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பெருமளவான மக்கள் படுகாயமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றபோதிலும் போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு அறிகுறியும் தெரிவதாக தெரியவில்லை.

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு | Idf Soldier Killed 5 Seriously Hurt Southern Gaza

இந்த நிலையில் காசாவின் தெற்கு பகுதியில் போரில் ஈடுபட்ட இஸ்ரேல் படையினரை இலக்கு வைத்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு | Idf Soldier Killed 5 Seriously Hurt Southern Gaza

அத்துடன் இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 247 படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading