World

காதலர் சம்மதத்துடன் மரத்தை திருமணம் செய்த பெண்!

காதலர் சம்மதத்துடன் பெண் ஒருவர் மரத்தை மணந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன், மெர்சிசைட் மாகாணம், செப்டன் நகரை சேர்ந்தவர் கேட் கன்னிங்ஹாம். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. 

இந்நிலையில் மெக்சிகோவில் சில ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கவும் சுற்றுசுழலை பாதுக்காக்கவும் ஒரு பெண் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இதால் ஈர்க்கப்பட்ட கேட் கன்னிங்ஹாம், ரிம்ரோஸ் பூங்கா வழியே புறவழிச் சாலையில் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார். இதற்கு அவரது காதலரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் வரும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மரக் கணவரை வண்ணக் காகிதங்கள், மணிகள் கொண்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் பழ வகைகளால் கேட் அழகுபடுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மரக் கணவருக்கு அன்பு முத்ததை பரிசளித்த கேட் இந்த முத்தத்திற்கு என் காதலர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading