Local

காதலர் தினத்தில் இதயத்தை அறிமுகம் செய்வாரா சஜித்?

பொதுத்தேர்தலில் யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சி இருக்கின்றது – என்று ரணில் ஆதரவு உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது என்றும், இதனை மாற்ற முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், யானை சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு சஜித் அணி முன்வரும் பட்சத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு தயாராகவே இருப்பதாகவும் ரணிலின் சகாக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், யானை சின்னத்தை நிராகரிப்பவர்கள் உண்மையான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களாக இருக்க முடியாது என ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று தெரிவித்தார்.
அதேவேளை, இதயம் சின்னத்தை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்காவிட்டால் ஓர் இரு நாட்களின் தனித்து களமிறங்குவதற்கு சஜித் அணி தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading