காதலியின் முகத்தை புர்ஜ் கலிபாவில் ஒளிரச் செய்ய ரூபா 50 இலட்சத்தை செலவு செய்த ரொனால்டோ!

பிறந்தநாளில் காதலியின் முகத்தை புர்ஜ் கலீபாவில் ஒளிரச் செய்ய ரூ. 50 இலட்சம் செலவழித்துள்ளார் ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸின் பிறந்தநாளில் துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவில் ஜார்ஜினா ரோட்ரிகஸின் முகத்தைக் காட்டும் லேசர் ஷோவை ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக ரொனால்டோ £50,000 (சுமார் ரூ. 50 லட்சம்) செலவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் ‘ஹேப்பி பர்த்டே ஜியோ’ என்ற செய்தியுடன் புர்ஜ் கலீஃபா ஒளிரும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
