World

காதலியை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு உணவாகப் போட்ட காதலன்!

அவர்களிடம் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக கூறினேன். பொலிஸூக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டினேன் என சொன்னேன். ஆனால் இதனை பொலிஸார் நம்பவில்லை. பின்னர் நான் சரஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு மனோஜ் சனோ தனது வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? எனக்கருதியும் இந்த கொடூர கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் காதலி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இப்படி பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். கைதான மனோஜ் சனோவை பொலிஸார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அவரை 16 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் கொலையுண்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பாதி உடல் பாகங்களை தான் பொலிஸாார் கைப்பற்றி உள்ளனர். அதனை போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி பொலிஸார் எடுத்து சென்று ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அதனை கழிவறைக்குள் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading