Local

காத்தான்குடி கர்பலா பிரதேச கடற்கரை விடுதி பொலிசாரால் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை
ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்ற வருவதாக இது பற்றிய மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading