Uncategorized

கார் மோதியதில் முழு கட்டிடமும் விழுந்து விபத்து!

அமெரிக்காவில் காரை திருடிச் சென்ற நபர்களை பொலிஸார் விரட்டிச் செல்லும்போது, இடம்பெற்ற விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் குறுக்கே வந்த ஒரு கார் மீது மோதி, அருகே இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கார் திருட்டு மற்றும் திருடர்களின் காரை அதிவேகமாக பொலிஸார் துரத்தும் சம்பவங்கள் அதிகம். மேலும் கார் திருடர்கள் மற்றும் கார் திருடர்களை போலீசார் விரட்டும் காட்சிகள் அவ்வப்போது போலீசாரால் வெளியிடப்படும்.

இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நிலையில்,  அமெரிக்காவின் பால்டிமோர் நகரில், காரைத் திருடி சென்றவர்களை பொலிஸார் துரத்தும் போது, திருடன் பயன்படுத்திய கார் சாலையின் குறுக்கே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்த அடுத்த நொடியே விபத்துக்குள்ளான இரண்டு கார்களும், அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதியதில், கட்டிடம் சுக்கு நூறாக உடைந்து இரண்டு கார்களின் மீதும் விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading