Local

காற்சட்டையுன் அவசர சிகிச்சையளித்து மூன்று உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்!

பதுளை பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கு அவசர சிகிச்சை அளிக்க, அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ, வீட்டில் இருந்தமாதிரியே வைத்தியசாலைக்கு உடனடியாக வந்து அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.

ஆபத்தான நிலையில் மூன்று நோயாளிகள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து வைத்தியர் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

அப்போதைய அவசரத்தின் காரணமாக கண்ணாடியை கூட மறந்துவிட்டு வேறு ஒருவரிடம் கண்ணாடி கேட்டு சிகிச்சை வழங்கியுள்ளார்.

மருத்துவக் கடமையில் வீட்டில் நின்ற வேளை கால்சட்டை உடையுடன் அப்படியே வந்து நோயாளிகளுக்கு இவ்வாறு சிகிச்சை அளித்துள்ளார். இதற்கு நோயாளியின் உயிரைப் பாதுகாப்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading