Sports

கால்பந்து போட்டியை பார்க்க வந்த கவர்ச்சி பெண் பொம்மைகளால் பரபரப்பு!

தென் கொரியாவில் நடத்தப்பட்ட கால்பந்து தொடரை காண்பதற்கு பார்வையாளர்கள் இல்லாததால் கவர்ச்சியான பெண் பிளாஸ்டிக் பொம்மைகளை பார்வையாளர்களாக பயன்படுத்திய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் சியோலில் சமீபத்தில் நடந்த கே-லீக் கால்பந்து தொடரில் எப்.சி., சியோல், குவாங்ஜு எப்.சி. ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.

இதில் எப்.சி., சியோல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் குவாங்ஜு எப்.சி., அணியை தோற்கடித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக இந்த போட்டிகளை காண்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் சியோல் அணி நிர்வாகம் அவர்களது அணியை ஊக்கமூட்டுவதற்காக கவர்ச்சியான பெண்கள் உருவிலான பிளாஸ்டிக் பொம்மைகள் ரசிகைகளாக பயன்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த பெண் உருவ பொம்மைகள் மிகவும் கவர்ச்சிகரமாக அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக கூறி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி ரசிகர் ஒருவர் பேசும்போது, இது ஒரு சர்வதேச அவமானகரமான செயல், இப்படி ஒரு நூதன யோசனை இவர்களுக்கு எப்படித்தான் வந்ததோ?” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ள இந்த சம்பவத்திற்கு சியோல் அணி வருத்தம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading