World

காஸா மக்களை நிரந்தரமாக வெளியேற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் தீவிரம்

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிலிருந்து சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவிற்கு நாடுகடத்தும் திட்டத்தில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களில், காஸா பகுதியை பொறுப்பேற்றுக்கொள்ளும் திட்டத்தை முன்வைத்தார்.

காஸா மக்களை நிரந்தரமாக வெளியேற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் தீவிரம் | Gaza Trump Reports Of Relocation Plan

தற்போது அந்த திட்டத்தின் முக்கிய நடவடிக்கையாக ஒரு மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுக்க இருக்கிறது.

மில்லியன் மக்களை நாடு கடத்தும் இந்தத் திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளது என்றும், ட்ரம்ப் நிர்வாகம் லிபியாவின் தலைமையுடன் இது குறித்து விவாதித்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்களை ஏற்றுக்கொள்ளும் லிபியாவிற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நிதியை ட்ரம்ப் நிர்வாகம் விடுவிக்கும்.

காஸா மக்களை நிரந்தரமாக வெளியேற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் தீவிரம் | Gaza Trump Reports Of Relocation Plan

ஆனால் பாலஸ்தீன மக்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டம் தொடர்பில் இதுவரை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அப்படியான திட்டம் எதுவும் இல்லை என முக்கிய அமெரிக்க அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். மேலும், கள நிலவரம் அத்தகைய திட்டத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும், அத்தகைய திட்டம் விவாதிக்கப்படவில்லை, மேலும் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹமாஸ் தரப்பில் இருந்தும் ஒரு மில்லியன் மக்களை வெளியேற்றும் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

காஸா மக்களை நிரந்தரமாக வெளியேற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் தீவிரம் | Gaza Trump Reports Of Relocation Plan

காஸா பகுதியை 1967ல் கைப்பற்றிய இஸ்ரேல், 2005 வரையில் தங்கள் இராணுவத்தை களமிறக்கியிருந்தது. 2006ல் நடந்த தேர்தலில் ஹமாஸ் தரப்பு வெற்றியடைந்ததுடன், 2007ல் காஸா பகுதியில் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் கொண்டுவந்தது.

இதனையடுத்து 2008, 2012 மற்றும் 2021ல் இஸ்ரேல் துருப்புகளின் அத்துமீறல்களுக்கு ஹமாஸ் படைகள் பதிலடி அளித்துள்ளது. ஆனால் 2023 அக்டோபர் மாதம் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலானது மிக மோசமான போருக்கு வழி வகுத்தது.

காஸா மக்களை நிரந்தரமாக வெளியேற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் தீவிரம் | Gaza Trump Reports Of Relocation Plan

இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூரத் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 53,000 கடந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading