நாகை – காங்கேசன்துறை கப்பலில் மேலதிக பயணப்பொதிகளை கொண்டு செல்லும் வாய்ப்பு
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்தது.
100 ஆவது நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு நேற்றைய தினம் புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முன்னதாகபயணிகள் 10 கிலோ கிராம் வரை பயணப்பொதியை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது 22 கிலோ கிராம் வரை மேலதிகமாக பயணப்பொதியை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதியளித்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.