Local

கித்துல் பூ வெட்டச் சென்றவர் மரத்தின் மேலேயே உயிரிழப்பு!

கித்துல் பூ வெட்டச் சென்ற நபர் ஒருவர் கித்துல் மரத்தின் மேலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊவ பரணகம பனாகொட பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கித்துல் மரங்களில் பூ வெட்டச் சென்றவர் திரும்பி வராததால் அவருடைய குடும்பத்தினர் காணாமல் போன நபரை தேடியுள்ளனர். இதன்போது, கித்துள் மரத்தில் இருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரத்தில் ஏறுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் அவர் சிக்கியிருந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊவ பரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading