World

கின்னஸ் சாதனைக்காக பாதுகாக்கப்படும் முட்டை!

கோவை அருகே நாட்டுக்கோழியின் முட்டை கின்னஸ் சாதனைக்காக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ளது குரும்பபாளையம். இங்குள்ள மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் அபூ. இவரது மனைவி சாமிலா. இவர்கள் வீட்டில் 40 நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு நாட்டுக்கோழி இட்ட முட்டை மெகா சைஸ் அளவில் இருந்தது. இதுகுறித்து சாமிலா கூறியதாவது: வழக்கமாக நாட்டுக்கோழி முட்டை 40 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும். ஆனால் இந்த கோழி முட்டை 90 கிராம் எடை இருந்தது. இதுமட்டுமில்லாமல் முட்டையின் உயரம் 8.1 சென்டிமீட்டரும், சுற்றளவு 5.9 சென்டி மீட்டரும் இருந்தது.

வழக்கமான முட்டையை விட இரண்டு மடங்கு அளவு பெரிதாகும். எனவே இந்த முட்டையை வீடியோ எடுத்து கின்னஸ் சாதனைக்கான இணையதளத்துக்கு விண்ணப்பித்துள்ளோம். இதை ரெப்ரிஜிரேட்டரில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். மெகா சைஸ் முட்டையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து ஆர்வமாக பார்த்து செல்கின்றனர். நாங்கள் சொந்தமாக எண்ணெய் செக்கு வைத்துள்ளோம். அதில் கிடைக்கும் புண்ணாக்குகளை தருவதால் நாட்டுக்கோழிகள் பெரிய அளவில் வளர்கின்றன. முட்டைகளையும் பெரிய அளவில் இடுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading