Local

கிரிக்கெட் பார்க்க சென்ற மாணவன் மர்மமான முறையில் மரணம்!

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள விவசாயம் செய்யும் மரக்கறி
தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தை சேர்ந்த உயிரிழந்த மாணவன் பொகவந்தலாவ
சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட
கிரிகெட் சுற்று போட்டியினை கண்டு கழித்து விட்டு வீடு திரும்புள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள தேடிய நிலையில்
மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடப்பதை சிறுவனின்
உறவினர்கள் கண்டுள்ளனர்.

பின்னர் சிறுவனை மீட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதோடு
இந்த சிறுவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில்
வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த
18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின்
ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்டவைத்திய
அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

கடந்த தினம் மலையகத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading