கிரிக்கெட் மட்டையால் ஷேன்வோர்ன் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ஆசிரியர்!

கிரிக்கெட் வீரர்ஷேன்வோர்ன் மறைவையொட்டி கிரிக்கெட் மட்டையால் அவரது படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஓவிய அஞ்சலி செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டையைச் சேர்ந்த .செல்வம். இவர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு மறைந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வோர்ன் உருவத்தை வரைந்தார்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷேன்வோர்ன்மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரஸ் பயன்படுத்தாமல் வெறும் கிரிக்கெட் மட்டையை பயன்படுத்தி ஷேன்வோர்ன் படத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய அஞ்சலி செலுத்தினர்.
