Sports

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் திகழ்ந்த யுவராஜ், 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்து தொடர் நாயகன் விருதை பெற்றவர்.

அதன் பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வை அறிவித்த அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மேலும், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குருத்வாராவில் பாரம்பரிய முறைப்படி அவரது தோழி ஹேசல் கீச் என்பவரை மணந்த யுவராஜ் சிங்கிற்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

இந்த அறிவிப்பை சமூக வலைத்தளம் மூலம் பதிவிட்டு, அதில் “கடவுளின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எங்களுக்காக பிராத்தனை செய்து கொண்ட ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மேலும், எங்களுக்கு இந்த ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த சிறிய குழந்தையை நாங்கள் வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது மட்டுமில்லாமல் உலகளவில் இருக்கும் அவரது ரசிகர்களும் யுவ்ராஜ் சிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading