World

சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூச்சி மற்றும் புழுக்களை வைத்து இறந்தவரின் நேரத்தை கணித்த அதிகாரிகள்!

மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பூச்சி மற்றும் புழுக்களை வைத்து அவர் இறந்த நேரம் துல்லியமாகக் கணிக்கப்பட்ட சம்பவம் டுபாயில் இடம்பெற்றுள்ளது.

டுபாயில் மனித நடமாட்டம் இல்லாத கட்டிடமொன்றில் இருந்து அண்மையில் பொலிஸார் சடலம் ஒன்றை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சடலத்தில் தோன்றிய பூச்சி மற்றும் புழுக்களை ஆய்வு செய்து அந்நபர் இறந்த நேரத்தை அதிகாரிகள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள்.

இதுகுறித்து டுபாய் பொலிஸ் துறையின் தடயம் மற்றும் குற்றவியல் இயக்குனரான அகமத் கூறியதாவது, ” சடலமொன்றில்  முதன்முதலாக தோன்றும் லார்வா எனப்படும் சிறிய புழுவையோ அல்லது முழுவதுமாக உருமாற்றம் பெற்ற பூச்சிகளையோ எடுத்து ஆய்வு செய்யும்போது, அவர் எப்போது உயிரிழந்துள்ளார் என்று துல்லியமாகக் கணிக்க முடியும்  எனத்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading