Sports

கிரிஸ் கெய்லின் “333 தந்த்ரா” புதிய உணவகம் திறப்பு!

கோவாவில் உள்ள கிளப்களில் காசா டிடோ கிளப் மிகவும் பிரபலம். இதன் கிளைகள் அங்குள்ள பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. சுற்றுலாபயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கறிந்து அதற்கேற்ப நல்ல பெயருடன் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், டிடோ கிளப்பின் உரிமையாளர்களான டேவிட் மற்றும் ரிகார்டோ டிசோசா ஆகியோர் கடந்த மாதம் 28ம் திகதி, “தங்களது டிடோ கிளப் நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு வந்துள்ளதாக’’ அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவாவில் உள்ள அர்போரா பகுதியில் செயல்படும் டிடோ கிளப் உரிமையை வெஸ்ட் மேற்கத்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ்கெயில் வாங்கியுள்ளார். அவர் அந்த கிளப்புக்கு 333 தந்த்ரா என பெயரிட்டுள்ளார். அதாவது, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெயில் 333 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ரன்கள் அதுதான். எனவே அதை ஞாபகப்படுத்தும் வகையில் அந்த கிளப்புக்கு 333 தந்த்ரா என பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகள், தரமான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தந்த்ரா நிறுவனம் அளிக்கும் என்று கிறிஸ்கெயில் உறுதிபட கூறி உள்ளார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading