Cinema

கீர்த்தி சுரேஷுடன் இணையும் அதர்வா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன்,விஜய், தனுஷ், விஷால், சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார்.தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. 

மேலும், செல்வராகவனுடன் இணைந்து ‘சாணியிக் காயிதம்’ படத்தில் நடித்து வருகிறார். இதேபோல தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் சிறந்த நடிகையாகவும் அறியப்படுகிறார் கீர்த்தி. 

இந்நிலையில், இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading