குடியேறி வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் இலங்கை..!!
டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘ரெமிட்லீ’ (Remitly) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான உலகளாவிய குடியேற்றக் குறியீட்டு (The Immigration Index 2026) தரவுகளின்படி, ஒட்டுமொத்த சர்வதேச தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, லக்செம்பர்க் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. எனினும், “குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகள்” என்ற குறிப்பிட்ட பிரிவின் கீழேயே ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை மிக உயர்ந்த இடத்தை பெற்றுள்ளது.
சிறந்த கல்வி முறை மற்றும் மிகக் குறைந்த குழந்தை பராமரிப்புச் செலவு போன்ற 34 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடாக இலங்கை இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

You must be logged in to post a comment.