Local

குடும்பப் பெண் படுகொலையில் கள்ளக் காதலன் சிக்கினார்!

முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading