World

குடையுடன் போராடிய அமெரிக்க ஜனாதிபதி!

ஜப்பானுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குடையுடன் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முன்னதாக ஜப்பான் மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனிக்கு வந்தடைந்தார். அவரை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கென்ஜி யமடா மற்றும் பிற உயரதிகாரிகள் வரவேற்றனர்.

அந்த நேரத்தில் மழை பெய்தது. ஜோ பிடன் தனது கையில் கருப்பு நிற குடையை வைத்திருந்தார்.

ஆனால் அவர் அதனை பயன்படுத்தாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அதிபர் மழையில் நனைவதைக் கவனித்த அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள், அவருக்கு குடையை பிடித்தனர். இருந்தும் அவர் தான் வைத்திருந்த குடையை திறக்கவில்லை.

சிறிது நேரத்திற்கு பின்னரே தனது சொந்த குடையை திறந்து பயன்படுத்தினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘ஜப்பானில் கால் பதித்ததும் ஜோ பிடன் குடையுடன் போராடுகிறார்’ என்றும் பலவாறாக கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading