குதிரையில் சென்று வாக்களித்த பிரபல தொழிலதிபர்
அரியானாவில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பாஜக எம்பியும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் குதிரையில் சென்று வாக்களித்துள்ளார்.
இந்திய மாநிலமான அரியானாவில், 90 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என்று பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
, பா.ஜ.க. எம்.பி.யும், தொழிலதிபரான நவீன் ஜிண்டால் தன்னுடைய வாக்கை செலுத்துவதற்காக குதிரையில் வந்துள்ளார்.
பின்னர் அவர் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்திக்கையில், “மக்களிடையே வாக்களிப்பதற்கு உற்சாகம் நிலவி வருகிறது.
அவர்கள் வாக்களித்துவிட்டு வருகின்றனர். இங்குள்ள மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். அரியானாவின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு கிடைக்கும். நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.

You must be logged in to post a comment.