World

குர்பான் கொடுக்காமல் பெருநாளை கொண்டாடிய மொரோக்கோ!!

பலி கொடுக்காமல் பெருநாள் கொண்டாடிய மொராக்கோ நாட்டு மக்கள். அந்நாட்டில் இவ்வாண்டினை பஞ்சம் மிகு ஆண்டாக அறிவித்துள்ளபடியாலும் நாட்டில் போதுமான அளவுக்கு கால்நடை வளம் இல்லாத காரணத்தாலும் பொதுமக்கள் யாரும் தனியாக ஆடுகளை பலி கொடுக்க வேண்டாம், பதிலாக அரசே தேவையான அளவுக்கு ஆடுகளை பலிகொடுத்துக்கொள்ளும் என மொராக்கோ ஆட்சியாளர் முஹம்மது Vl வேண்டுகோள் வைத்திருந்ததை அடுத்து மக்கள் யாரும் தனியாக உயிர்ப்பலி கொடுக்கவில்லை.

ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் மொராக்கோ ஆட்சியாளர் இஸ்லாத்தை விட்டு மக்களை விலக்கிவிட்டார் என அண்டை நாட்டு இஸ்லாமிய அரசுகள் அவர் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். எந்த ஊரில் கலவரம் நடந்தாலும் அங்கு புகுந்து கொள்ளையடிக்க காத்திருக்கும் நம்ம (இந்திய) மங்கி கூட்டங்களும் மொராக்கோ நாட்டைப் போல இந்திய முஸ்லிம்களும் Eco Friendly Eid கொண்டாட அறிவுரை நல்கி இணையதளங்களில் ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கிறது.

இதன் மீது கவனம் கொண்டுவந்த மொராக்கோ அரசு மீண்டும் தமது அறிக்கையில் பெருநாளுக்கு ஆடு பலியிடுவது சுன்னாஹ் முஅக்கதாவில் தான் வருகிறது. வசதி வாய்ப்புள்ளவர் பலி பிராணிகளை குர்பான் கொடுக்கலாம், மற்றபடி மார்க்கத்தில் அது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், ஐவேளைத் தொழுகைகளில் முன் சுன்னத் பின் சுன்னத் இருப்பதை போலவும், வெள்ளிக்கிழமை குத்பா தொழுகையை போலவும் பெருநாள் தொழிகையை போலவும் ஆடு பலியும் சுன்னாஹ் முஅக்கத்தாவில் சேரும் அது கட்டாய ஃபர்த் இல்லை , அடுத்த ஆண்டு எங்களது நிலம் வளம் பெற்றால் நாங்கள் உயிர்ப்பலியிட கடமைப்படுவோம் என அறிவிப்பு செய்துள்ளார். ( தக்க காரணங்களின்றி சுன்னாஹ் முஅக்கதாவினை தொடர்ச்சியாக கைவிடுவோருக்குத்தான் பாவம் வந்து சேரும்)

பொதுவாக தனித்தனியாக ஆடு வளர்த்தோ அல்லது முழு தொகை கொடுத்து ஒரு ஆட்டையோ வாங்கி பலியிட வசதியில்லாதவர்கள் ஒன்றிரண்டு பேராக இணைந்து கூட்டாக பிராணிகள் வாங்கி பலியிடுவது நூற்றாண்டுகளாக பல நாடுகளிலும் வழமையில் இருப்பது தான்,அதுபோல கூட்டாகவும் பங்கு சேர்ந்து எங்களால் பலியிட வசதி இல்லை என்போருக்கு அதுவும் கட்டாயமில்லை என்பதே மார்க்க வழிகாட்டுதல். நாட்டில் பஞ்சம் நிலவும் காரணத்தால் அதனை இப்போது மக்களுக்காக மொராக்கொ அரசே செய்துள்ளது , இதில் அவர்களை சாபம் இடவோ இழித்து பேசவோ ஒரு முகாந்திரமும் இல்லை.

-Nasrath S Rosy-

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading