Local

குறைந்த பசி நிலையைப் பதிவு செய்த நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி சுட்டெண்ணில் (Global Hunger Index – GHI) குறைந்த பசி நிலையைப் பதிவு செய்த நாடாக இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

அறிக்கையின்படி, இலங்கை 10.2 புள்ளிகளைப் பெற்று, மதிப்பீடு செய்யப்பட்ட 122 நாடுகளில் 53ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

எனினும், இலங்கை இன்னமும் மிதமான பசி நிலை கொண்ட நாடுகள் பிரிவிலேயே காணப்படுகிறது. இதன் மூலம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்கள் தொடர்ந்து நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.9 சதவீதமானோர் போதிய ஊட்டச்சத்தின்றி வாழ்வதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 10.1 சதவீதமானோர் வயதுக்கேற்ற வளர்ச்சியின்மையாலும், 9.3 சதவீதமானோர் உயரத்துக்கேற்ற எடை குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading