Local

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தலைவர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading