Features

குளிராகும் சூரியன் ஆராய்ச்சியில் தகவல்!

கடந்த காலங்களை ஒப்பிடுகளையில் சூரியன் அமைதியாகவும் குளிராகவும் இருப்பதாக இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பூமியில் இருந்து 147.23 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளில் மனித சமூகமும் பின் தங்கியே இருந்து வருகிறது. தொலைநோக்கிகள் பயன்படுத்தி இதுவரை சூரியன் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் 1996-2007 ஆண்டையும் 2008-2019யும் ஒப்பிடும்போது, இடைப்பட்ட காலத்தில் சூரியன் அமைதியாகவும் குளிராகவும் இருப்பதாக இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2008-2019 வரையிலான கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (சிஎம்இ) அளவு, நிறை மற்றும் உள் அழுத்தத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸிகள் என்பது சூரியனில் இருந்து வரும் தீவிர எரிப்புகளால் ஏற்படும் மிகப்பெரிய சூரிய துகள் வெடிப்புகள் ஆகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading