World

குளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்!

கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதால், பெரும்பாலான நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.

இதனிடையே இந்தியாவில் உருவாக்கிய டெல்டா ரக வைரஸ், துவக்கத்தில் கிழக்காசிய நாடுகளை மட்டுமே அச்சுறுத்திவந்த நிலையில், தற்போது உலகின் பல நாடுகளில் அதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் எப்படியெல்லாம் உருமாறும் என்று உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் குறித்து பேசிய பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான குழுமத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ்,

“குளிர்காலத்தில் கொரோனா புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளது. இது தற்போது உள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா அல்லது மிதமான பாதிப்பு உடையதா என இன்னும் சரியாகத் தெரியவில்லை.

விரைவில் அதற்கான முடிவை தங்கள் குழு அறிவிக்கும். உலகம் வரவிருக்கும் ஆண்டுகளில் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகள் என்னும் நிலைதான் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading