குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 90 பேருக்கு கொரோனா வைரஸ்

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாம்களில் கண்காணிக்கப்பட்டுவந்த இலங்கையர்களுள் 90 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களில் இற்றைவரை 157 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸால் 619 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 270 இற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆகும். இதுவரை 695 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். 477 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
