Cinema

கையில் பணம் இல்லை சவர்க்காரம் விற்கும் பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடம் பிடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சோப்பு விற்பனை செய்து வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கோலிவுட் துறையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது ஒரு வேளை சாப்பாடுக்கான சோப்பு விற்பதாக தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு வெளியான நியங்கள் ஜெய்கட்டும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார்.
பிறகு உச்சத்தில் இருந்த இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் அம்மா, அக்கா என கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு ஆறு படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக ஊடகங்களில் இவர் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் படவாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
தற்போது ஒரு வேளை சாப்பிடுவதாற்காக தெரு தெருவாக சென்று சோப்பு விற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லை, கழிவறையை கழுவ அழைத்தால் கூட சென்று கழுவி கொடுத்து விட்டு தைரியமாக திருப்புவேன். இதுவும் வேலைதான் என நடிகை ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படி அவர் தன் நம்பிக்கையுடன் பேசியது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading