Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.87 இலட்சத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.87 இலட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,487,320 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 215,429,451 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 192,615,653 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 112,700 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 220 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 54 லட்சத்து 29 ஆயிரத்து 451ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 83 லட்சத்து 26 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 653 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 44 லட்சத்து 87 ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading