Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.24 இலட்சத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.24 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 15 லட்சத்து 24 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6 கோடியை 62 லட்சத்து 23  ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 கோடியை 58 லட்சத்து 07 ஆயிரத்து 872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1 கோடியை 88 லட்சத்து 91 ஆயிரத்து 779 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 06 ஆயிரத்து 090 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா   –    பாதிப்பு – 14,772,535 , உயிரிழப்பு – 285,550 , குணமடைந்தோர் – 8,658,882
இந்தியா      –    பாதிப்பு – 9,608,418,  உயிரிழப்பு – 139,736,  குணமடைந்தோர் – 9,058,003
பிரேசில்      –    பாதிப்பு – 6,534,951 ,  உயிரிழப்பு -175,981,  குணமடைந்தோர் – 5,744,369

ரஷியா       –   பாதிப்பு – 2,402,949 ,  உயிரிழப்பு – 42,176  ,  குணமடைந்தோர் – 1,888,752
பிரான்ஸ்     –   பாதிப்பு – 2,268,552,  உயிரிழப்பு – 54,767  , குணமடைந்தோர்  – 168,352
இத்தாலி   –       பாதிப்பு – 1,688,939,  உயிரிழப்பு – 58,852 ,  குணமடைந்தோர்  – 872,385

அர்ஜென்டினா  –    பாதிப்பு – 1,454,631 ,  உயிரிழப்பு -39,512,  குணமடைந்தோர்- 1,281,955
கொலம்பியா   –    பாதிப்பு – 1,352,607 ,  உயிரிழப்பு 37,467  ,குணமடைந்தோர்  -1,240,990…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading