World

கொரோனாவால் ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலை இழப்பு!

இரண்டு பில்லியன் யுரோக்கள் செலவினை குறைப்பதற்காக 15 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரெனால்ட் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் இடைக்கால தலைவரான க்ளோடில்டே, இந்த திட்டம் அத்தியாவசியமானது என கூறி உள்ளார். அந்த நிறுவனமானது மின்சார கார், வேன் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி உள்ளது. இதன் காரணமாக பிரான்ஸில் மட்டும் 4,600 பேர் வேலையிழப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸில் ஆறு தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.

ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலையிழப்பு

ரெனால்ட் நிறுவனத்துடன் கார் உற்பத்தியில் இணைந்து செயல்படும் நிசான் நிறுவனமும் பெரிய அளவில் பணியாளர் குறைப்பினை அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பே இந்த நிறுவனங்களின் விற்பனை சரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading