LocalUncategorized

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவிப்பு!

விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading