World

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு பெட்டியில் அடைப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் பிறப்பிடம் என கூறப்படும் சீன தேசத்தில் கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு வரும் மக்களை உயிரோடு இரும்பு பெட்டிக்குள் வைத்து முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எல்லைகளை மூடுவது, பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, ஊரடங்கு மாதிரியான நடைமுறைகள் ஆரம்ப நாட்களில் சீன அரசுக்கு பலன் கொடுத்திருந்தாலும் தற்போது அங்கு நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிகளவிலான மக்கள் தொற்று பாதிப்பு ஆளாகி வருகின்றனர் என சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அங்கு தொடங்க சில வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அரசுக்கு பெரிய தலைவலியாக இது அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாட்கள் வரை வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அ

அதுவும் சிறிய அளவிலான இரும்பு பெட்டிக்குள் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு 20 மில்லியன் மக்கள் அவர்களது வீடுகளில் முடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கக்கூட அவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள Anyang, Xi’an பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading