Local

கொரோனாவால் பேலியகொடை மீன் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தையை நாளை (22) முதல் 03 தினங்களுக்கு மூடுவதற்கு அதன் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் நேற்று (20) கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவர் மீன் கொள்வனவு செய்வதற்காக குறித்த சந்தைக்கு வருகை தந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் உள்ளன. இந்நிலையில் அதன் விற்பனையாளர்கள் நாளையதினம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், குறித்த வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமஆராச்சி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading